ADDED : மார் 12, 2024 08:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்:கீழையூர் நாராயணன் 45 சென்னையில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்தார்.
விடுமுறையில் ஊருக்கு திரும்பியவர் மார்ச் 3 தனியாமங்கலம் நான்கு வழிச்சாலையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது மது போதையில் வந்த மூவர் வெட்டியதில் நாராயணன் இறந்தார். இவ்வழக்கில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று கீழவளவு போலீசார் பனங்காடி வெங்கடேச பெருமாளை 23 கைது செய்தனர்.

