உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : அக் 26, 2026 08:11 PM
அ நிறம் | அளவு
புதுடில்லி: அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஸ்கூட்டரில் சென்றவர் உயிரிழந்தார்.
மேற்கு டில்லி கேசவ்புரத்தை சேர்ந்தவர் ராஜேஷ் விக்,56. பீராகர்ஹியில் நடக்கும் கண்காட்சியில் நேற்று முன் தினம் இரவு, ராட்டினங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை அமைக்கும் பணியை முடித்து விட்டு, ஸ்கூட்டரில் வீடு திரும்பினார். பஞ்சாபி பாக் போலீஸ் காலனி அருகே, அடையாளம் தெரியாத வாகனம் ஸ்கூட்டர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. ராஜேஷ் தூக்கி வீசப்பட்டார்.
தகவல் அறிந்து வந்த போலீசார், ராஜேஷை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
