தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/‘உலகளாவிய சவால்களுக்கு பார்லிமென்ட் மூலம் தீர்வு’

‘உலகளாவிய சவால்களுக்கு பார்லிமென்ட் மூலம் தீர்வு’

‘உலகளாவிய சவால்களுக்கு பார்லிமென்ட் மூலம் தீர்வு’


ADDED : அக் 26, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2026 08:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

– சிறப்பு நிருபர் –

‘‘பரஸ்பர நம்பிக்கையுடன், உலகளாவிய சவால்களுக்கு அமைதியான தீர்வு காண, ‘பிரிக்ஸ்’ நாடுகளின் பார்லிமென்டுகளால் நிச்சயம் உதவ முடியும்,’’ என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்.

தலைநகர் டில்லியில் உள்ள பழைய பார்லி., கட்டடத்தின் வரலாற்று சிறப்புமிக்க மைய மண்டபத்தில், ‘12வது பிரிக்ஸ் பார்லி., மன்றம் – 2026’ மாநாட்டை இன்று (அக்.,26) தொடங்கி வைத்து, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பேசியதாவது:

பிரதமர் மோடி தலைமையில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், கூட்டு அறிக்கை ஒருமனதாக ஏற்கப்பட்டது; இது ஒரு மைல்கல். கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உறுதிமொழிகளை, உறுதியான மற்றும் நீடித்த பலன்களாக மாற்றுவதில் தான், இப்போது உண்மையான சவால் உள்ளது.

போர்கள், பொருளாதார ஸ்திரமின்மை, பயங்கரவாதம், காலநிலை மாற்றம் போன்ற சவால்கள் அதிகரிக்கின்றன. அவற்றின் விளைவுகள், தேசிய எல்லைகளை தாண்டி செல்கின்றன. இதன் மூலம், கூட்டு பொறுப்புணர்வு அவசியமாகிறது.

இத்தகைய சவாலான சூழலில், உரையாடல்கள், துாதரக உறவுகள், ஒத்துழைப்பு ஆகியவை, இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. மக்களின் வெளிப்பாடுகளாக விளங்கும் பார்லிமென்டுகள், புரிதலுக்கான பாலங்களாக செயல்படவும், பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தவும், சர்வதேச பதற்றங்களை தணிக்கவும், உலகளாவிய சவால்களுக்கு அமைதியான மற்றும் ஆக்கப்பூர்வமான தீர்வுகளை முன்னெடுக்கவும் உதவ முடியும். வளர்ந்து வரும் நாடுகளின் குரல், உறுதியான கொள்கைகளிலும், அர்த்தமுள்ள ஒத்துழைப்பிலும் வெளிப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us