தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் 100 நாட்கள் நீடித்து சாதனை

பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் 100 நாட்கள் நீடித்து சாதனை

பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் 100 நாட்கள் நீடித்து சாதனை


UPDATED : நவ 21, 2026 08:04 PM

ADDED : நவ 21, 2026 08:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 08:04 PM ADDED : நவ 21, 2026 08:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: பார்லிமென்டின் மழைக்கல கூட்டத்தொடர் முடிவுக்கு வராமல் 100 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ள நிலையில், சிறப்பு அமர்வை கூட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பார்லிமென்டின் நடப்பாண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை, 20ல் தொடங்கியது. ஆக.,13 அன்று இரு சபைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. மொத்தம், 19 நாட்கள் நடந்த கூட்டத்தொடரில், கேரள பெயர் மாற்றம் மசோதா, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை திருத்த மசோதா உட்பட, 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

மழைக்காலக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டு நேற்றுடன், 100 நாட்கள் நிறைவடைந்தது. கடந்த 2008ல், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மழைக்கால கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டு, 87 நாட்கள் நீடித்தது. இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்டு, 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், தொகுதி மறுவரையறை குறித்த அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்ற சிறப்பு அமர்வை மத்திய அரசு எப்போது கூட்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் எழுந்துள்ளது.

இதற்கிடையே, அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக, சிறப்பு அமர்வை அல்லது கூட்டத்தொடரின் நீட்டிப்பை நடத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து காங்கிரசின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘பார்லி.,யின் மழைக்கால கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு இதுவரை முறைப்படி முடிவுக்கு கொண்டுவரப்படாமல் 100 நாட்கள் ஆகிவிட்டன. தொகுதி மறுவரையறை குறித்த அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்ற பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா லோக்சபாவில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற முயன்று வருகிறார்’ என, தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us