ADDED : ஏப் 22, 2024 11:22 PM

சத்தீஸ்கரில் முந்தைய காங்கிரஸ் அரசு, நக்சல்களை கட்டுப்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது பா.ஜ., ஆட்சி அமைந்ததும், நக்சல்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுதும் அமைதி நிலவுகிறது.
அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,
தடுத்து நிறுத்துங்கள்!
'நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், இலவசங்களை வாரி வழங்குவோம்' என கூறி, காங்கிரஸ் சார்பில் கர்நாடகா முழுதும் உத்தரவாத அட்டை, வாக்காளர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. இதை, தேர்தல் கமிஷன் தடுத்து நிறுத்த வேண்டும்.
குமாரசாமி, , தலைவர், மதச்சார்பற்ற ஜனதா தளம்
எடுபடாத பிரசாரம்!
ராகுலின் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை. இதுபோன்ற சூழலில், அவரது உடல்நிலை பாதிக்கப்படுவது இயல்பு தான். அதனால் தான் அவர், ஜார்க்கண்டில் நடந்த இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
கைலாஷ் விஜய்வர்கியா, மூத்த தலைவர், பா.ஜ.,

