
பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் நேர்மையானவராக இருக்கலாம். ஆனால் அவரது அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் மக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கின்றனர். பீஹார் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். அப்போது, இவ்வளவு ஊழலை பார்த்ததில்லை என, மக்கள் என்னிடம் வேதனையுடன் தெரிவித்தனர்.
பிரசாந்த் கிஷோர் தலைவர், ஜன் சுராஜ்
மோசடியை தடுக்க வேண்டும்!
ஆதார் அடையாள அட்டைகளை போலியாக உருவாக்கி, கள்ள ஓட்டுப் போடுவதை தடுக்க, அவற்றை, 'சிப்'களுடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் மோசடி தடுக்கப்படும்; தேர்தல்கள் நியாயமாக நடக்கும். 2027ல் உ.பி.,யில் நடக்கும் சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்தி சமாஜ்வாதி நிச்சயம் ஆட்சியை கைப்பற்றும்.
அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி
வெட்கப்பட வேண்டும்!
இட ஒதுக்கீடு என்பது, உண்மையில் தேவைப்படுபவர்களுக்கு இருக்க வேண்டும். என் பெற்றோர் படித்தவர்கள் என்பதால், நான் இட ஒதுக்கீடு கேட்க முடியாது. அப்படி கேட்டால், வெட்கப்பட வேண்டும். இது குறித்து கல்லுாரிகள் உட்பட அனைத்து தளங்களிலும் விவாதம் நடத்தி அனைவரது கருத்துக்களை கேட்டறிய வேண்டும்.
சுப்ரியா சுலே லோக்சபா எம்.பி., - தேசியவாத காங்., சரத் சந்திர பவார்