
பெங்களூரில், 550 கி.மீ., நீளமுள்ள சாலைகளை சீரமைக்க, 1,100 கோடி ரூபாய் மதிப்பிலான செயல் திட்டத்தை வகுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இதுவரை, நகரின் சாலைகளில் உள்ள, 13,000 பள்ளங்களை சீரமைத்துள்ளோம் . இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
டி.கே.சிவகுமார் கர்நாடக துணை முதல்வர், காங்கிரஸ்
அச்சுறுத்தும் பா.ஜ.,!
முஸ்லிம்கள், தலித்துகளுக்கு கிடைத்துள்ள ஒரே சக்தி, ஓட்டளிக்கும் உரிமை. ஆனால், பீஹாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பட்டியலின் வாயிலாக மத ரீதியில் அவர்களை பா.ஜ., நீக்கி, அச்சுறுத்தல் அளிக்க வாய்ப்பளிக்கும்.
அசாதுதீன் ஓவைசி தலைவர், ஏ.ஐ.எம்.ஐ.எம்.,
கண்டுகொள்ளாதது ஏன்?
திருமலை திருப்பதி தேவஸ்தானம், அவர்களின் நிதியில் கோவில் கட்டும் பணிக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், முதல்வர் சந்திரபாபு நாயுடு, இவ்விவகாரத்தில் தனிகவனம் செலுத்தும் நிலையில், தலித் மக்களின் அடிப்படை பிரச்னைகளை கண்டுகொள்ளாதது ஏன்?
ஒய்.எஸ்.ஷர்மிளா ஆந்திர மாநில தலைவர், காங்.,