சபரிமலை டைரியில் பினராயி படம்: பக்தர்கள் எதிர்ப்பு
சபரிமலை டைரியில் பினராயி படம்: பக்தர்கள் எதிர்ப்பு
ADDED : ஜன 03, 2024 11:19 PM

சபரிமலை:சபரிமலை வரலாற்றில் முதல்முறையாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டுக்கான டைரியில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் படங்கள் இடம்பெற்றுள்ளன.
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் படங்கள் முதல் முறையாக இதில் அச்சிடப்பட்டதற்கு பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சபரிமலையில் மண்டல, -மகர விளக்கு கால சீசனை ஒட்டி திருவிதாங்கூர் தேவசம்போர்டு அய்யப்பன் கோவிலை மையமாக கொண்டு டைரி அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது.
இதில் சபரிமலை நடை திறப்பு மற்றும் அடைக்கும் நாட்கள், பூஜை விபரங்கள், பூஜை கட்டணம் உள்ளிட்ட சபரிமலை தொடர்பான அனைத்து விபரங்கள் இடம்பெற்றிருக்கும்.
மேலும், திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் படங்கள் அதில் இருக்கும்.
இந்தாண்டுக்கான டைரியின் ஆறாவது பக்கத்தில், முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் படங்கள் இடம்பெற்றுள்ளன். இறைபக்தி இல்லாதவர்கள் படங்களை டைரியில் எப்படி சேக்கலாம் என கேட்டு, பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.