sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மேற்காசிய போரால் எரிபொருள் நெருக்கடி; பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

/

மேற்காசிய போரால் எரிபொருள் நெருக்கடி; பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

மேற்காசிய போரால் எரிபொருள் நெருக்கடி; பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

மேற்காசிய போரால் எரிபொருள் நெருக்கடி; பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

2


UPDATED : மார் 22, 2026 05:25 PM

ADDED : மார் 22, 2026 03:44 PM

Google News

2

UPDATED : மார் 22, 2026 05:25 PM ADDED : மார் 22, 2026 03:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மேற்காசியாவில் நிலவும் போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாட்டு அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 23 நாட்களாக நீடித்து வருகிறது. இந்தப் போரினால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால், உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்தப் போர் இன்னும் நீண்டு கொண்டே சென்றால், இந்தியாவிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

இந்த நிலையில், மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடியான சூழலுக்கு மத்தியில், முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். பெட்ரோலியம், கச்சா எண்ணெய், மின்சாரம் மற்றும் உரங்கள் போன்ற முக்கிய துறைகளின் நிலையை ஆய்வு செய்தார்.

ஹார்முஸ் ஜலசந்தியில் முடக்கப்பட்டுள்ளதால், வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் சரக்கு கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனவே, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதை அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us