புதுடில்லி: டில்லி மாநகரப் போலீசில் குற்றப்பிரிவு உட்பட பல பிரிவுகளில் பணியாற்றும் 350க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு, நவீன டிஜிட்டல் கருவிகள் மற்றும் தொழிநுட்பங்களை பயன்படுத்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
டில்லி மாநகரப் போலீஸ் தலைமை அலுவலகத்தின், ஆதர்ஷ் ஆடிட்டோரியத்தில் நேற்று முன்தினம் நடந்த பயிற்சி முகாமை, டில்லி போலீஸ் கமிஷனர் சதீஷ் கோல்ச்சா துவக்கி வைத்தார்.
மாநகரப் போலீசின் குற்றப்பிரிவு உட்பட பல பிரிவுகளைச் சேர்ந்த 310 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 41 உதவி கமிஷனர்கள் பங்கேற்றனர். விசாரணை, கண்காணிப்பு மற்றும் தகவல் சேகரிக்கும் பணிகளுக்கு டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்த, தொழில்நுட்ப வல்லுனர்கள் பயிற்சி அளித்தனர்.
கண்காணிப்பு, கைரேகை பகுப்பாய்வு, மொபைல் சாதனங்களை கண்காணித்தல் உட்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
டில்லி மாநகரப் போலீசின் மூத்த அதிகாரி கூறியதாவது:
புத்திசாலித்தனமான மற்றும் வேகமான பணியை இலக்காகக் கொண்டு, போலீஸ் அதிகாரிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

