ADDED : பிப் 21, 2024 02:54 AM

லக்னோ : அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியின் தேசிய பொதுச்செயலராக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா, கடந்த 13ம் தேதி அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
துளசிதாசர் எழுதிய ராமசரிதமானஸ் இதிகாசம், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்து சர்ச்சையானதை தொடர்ந்து, அவர் மீது கட்சி தலைமை பாரபட்சம் காட்டுவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக நேற்று மவுரியா தெரிவித்தார். இதுகுறித்து, அகிலேஷ் யாதவுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறிருப்பதாவது:
உங்களுடன் பணியாற்றியதை நல்ல அனுபவமாக கருதுகிறேன். மேலும் பொதுச்செயலர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த பின், அது தொடர்பாக என்னுடன் எந்த பேச்சும் நடத்தவில்லை. இதனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

