sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 பிரதமருக்கு யூ டியூபில் 3 கோடி ரசிகர்கள்

/

 பிரதமருக்கு யூ டியூபில் 3 கோடி ரசிகர்கள்

 பிரதமருக்கு யூ டியூபில் 3 கோடி ரசிகர்கள்

 பிரதமருக்கு யூ டியூபில் 3 கோடி ரசிகர்கள்

2


ADDED : மார் 04, 2026 03:34 AM

Google News

ADDED : மார் 04, 2026 03:34 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'யூ டியூப்' சேனலில் 3 கோடி பின்தொடர்பவர்களை பெற்று, பிரதமர் நரேந்திர மோடி புதிய சாதனை படைத்துள்ளார்.

'யூ டியூப், இன்ஸ்டா, எக்ஸ்' உள்ளிட்ட சமூக வலைதளங்களை பிரதமர் மோடி பயன்படுத்தி வருகிறார்.

கடந்த 2014ல் பதவியேற்றது முதல் மேற்கொண்ட பயணங்கள், அரசியல் தலைவர்களுடனான சந்திப்புகள், அரசு விழாக்கள், வாழ்த்துகள் உள்ளிட்டவற்றை தன் சமூக வலைதள பக்கங்களில் அவர் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், யூ டியூபில் அதிகம் பின்தொடர்வோரை கொண்ட தலைவர்கள் பட்டியலில், பிரதமர் மோடி புதிய சாதனை படைத்துள்ளார். அவரின் யூ டியூப் சேனலை 3 கோடி பேர் பின்தொடர்வதை அடுத்து, அதை பயன்படுத்தும் உலகத் தலைவர்களில் மோடி முதலிடத்தில் உள்ளார்.

அடுத்த இடத்தில் உள்ள பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவை 75 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 43 லட்சம் பேருடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளத்தை, 2014ம் ஆண்டு முதல் பயன்படுத்தி வரும் பிரதமர் மோடியை 10 கோடி பேர் பின்தொடர்ந்ததை அடுத்து, புதிய சாதனையை அவர் கடந்த மாதம் படைத்திருந்தார்.






      Dinamalar
      Follow us