sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆந்திராவில் பிரதமர் மோடி ரோடு ஷோ: முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு

/

ஆந்திராவில் பிரதமர் மோடி ரோடு ஷோ: முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு

ஆந்திராவில் பிரதமர் மோடி ரோடு ஷோ: முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு

ஆந்திராவில் பிரதமர் மோடி ரோடு ஷோ: முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு

11


UPDATED : ஜன 08, 2025 08:28 PM

ADDED : ஜன 08, 2025 06:29 PM

Google News

UPDATED : ஜன 08, 2025 08:28 PM ADDED : ஜன 08, 2025 06:29 PM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறங்களில் பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பளித்தனர்.

விமானம் மூலம் விசாகப்பட்டினம் வந்த பிரதமர் மோடியை, கவர்னர் அப்துல் நசீர், முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து, ஆந்திரா பல்கலை மைதானத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி புறப்பட்டார்.

திறந்த வெளி வாகனத்தில் ரோடு ஷோ நடத்தி பிரதமர் மோடியை, சாலைகளின் இருபுறங்களில் தொண்டர்கள், நிர்வாகிகள் திரண்டு நின்று வரவேற்றனர். தொண்டர்கள் பூக்களை வீசி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பிரதமருடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஆந்திர மாநிலத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல்லையும் நாட்ட இருக்கிறார். விசாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள புடிமடகாவில் ரூ.18,500 கோடி மதிப்பிலான நேஷனல் க்ரீன் எனர்ஜி ஹைட்ரோஜன் திட்ட மையத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த மையம் 20 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க சக்தியை உருவாக்கும் திறன் கொண்டது. இது இந்தியாவின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மையமாகும்.

அதுமட்டுமில்லாமல், பலகோடி மதிப்பிலான திட்டங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி, 19,500 கோடி ரூபாயிலான ரயில்வே மற்றும் சாலை திட்டங்களுக்கான அடிக்கல்லையும் நாட்டினார்.சுகாதாரத்துறையின் சார்பில், அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள நாக்கபள்ளியில் டிரக் பார்க்கை கட்டுவதற்கான அடிக்கல்லையும் நாட்டினார்

அதேபோல, திருப்பதியில் உள்ள கிருஷ்ணபட்டினம் தொழிற்பேட்டையில் ரூ.10,500 கோடி மதிப்பிலான புதிய தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டுகிறார். இதன்மூலம், ஒரு லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற முடியும்.

ஆந்திராவுக்கு சிறப்பு முன்னுரிமை

ஆந்திராவில் ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசியதாவது: சாத்தியம் மற்றும் வாய்ப்புகளுக்கான மாநிலமாக ஆந்திரா உள்ளது.ஆந்திர மாநிலம் வளர்ச்சி பெறும்போது, இந்தியாவும் வளர்ச்சி அடைந்த தேசமாக மாறும். எனவே ஆந்திராவின் வளர்ச்சி என்பது எங்களது கொள்கை. ஆந்திர மக்களுக்கு சேவை செய்வதில் உறுதியாக இருக்கிறோம். 2.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற ஆந்திர அரசின் லட்சியம் நிறைவேற, மாநில அரசுடன் மத்திய அரசு தோளோடு தோள் சேர்ந்து பணியாற்றி வருகிறது. பல லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களில் ஆந்திராவுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இன்று அடிக்கல் நாட்டப்பட்டு உள்ள திட்டங்கள் நிறைவேறும் போது ஆந்திரா வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.








      Dinamalar
      Follow us