ADDED : ஜன 06, 2024 12:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரா:கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதி, மாரடைப்பு ஏற்பட்டு சிறையில் மரணம் அடைந்தார்.
உ.பி., மாநிலம் மதுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிஷ்னி, 69. கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவருக்கு, 2019ம் ஆண்டு ஜூலை மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, மதுரா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
சுவாசக் கோளாறு உள்ளிட்ட சில உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்ட கிஷ்னிக்கு, புத்தாண்டு நாளில் மாரடைப்பு ஏற்பட்டது. கடந்த 3ம் தேதி, சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
உடற்கூறு ஆய்வுக்குப் பின், அவரது உடல் நேற்று முன் தினம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.