தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பிரியங்கா கணவர் ராபர்ட் வாத்ராவுக்கு நெருக்கடி

பிரியங்கா கணவர் ராபர்ட் வாத்ராவுக்கு நெருக்கடி

பிரியங்கா கணவர் ராபர்ட் வாத்ராவுக்கு நெருக்கடி


UPDATED : ஏப் 15, 2025 11:01 AM

ADDED : ஏப் 15, 2025 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 15, 2025 11:01 AM ADDED : ஏப் 15, 2025 10:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி : காங்., முன்னாள் தலைவர் சோனியாவின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வாத்ராவுக்கு அமலாக்கத்துறை இரண்டாவது முறை சம்மன் அனுப்பி உள்ளது. இதனையடுத்து இன்று (ஏப்.,15) அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

கடந்த 2018ல் குருகிராமில் உள்ள 3.5 ஏக்கர் நிலம் வாங்கி விற்றதில் இரு நிறுவனங்கள் இடையே சட்ட விரோத பண பரிமாற்றம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் வட்டியில்லாமல் ரூ.65 கோடி கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே அமலாக்கத்துறை ஏப்.8ல் ஒரு சம்மன் அனுப்பியது. தற்போது 2வது சம்மன் அனுப்பி உள்ளது. ஆனாலும் வாத்ரா ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில் இன்று ஆஜரானார்.

இது சதி திட்டம்


முன்னதாக பேசிய ராபர்ட் வாத்ரா, ''இது எனக்கு எதிராக மத்திய அரசின் சதி திட்டம். என்னை பழிவாங்க அரசு இயந்திரத்தை ஏவி விடுகிறது. நான் எப்போதெல்லாம் மக்களுக்காக பேசுகிறேனோ, அப்போதெல்லாம் என் வாயை மூட இதுபோன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபடுகிறது'' என குற்றம் சாட்டியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us