போராட்டம் நடக்கும் இடத்தை தொடர்ந்து ஆக்கிமிக்க கூடாது: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
போராட்டம் நடக்கும் இடத்தை தொடர்ந்து ஆக்கிமிக்க கூடாது: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
UPDATED : நவ 03, 2026 04:41 PM
ADDED : நவ 03, 2026 04:36 PM

புதுடில்லி: ‘ஒரு போராட்டம் நடத்தும் இடத்தை தொடர்ந்து ஆக்கிரமித்து வைத்திருக்க முடியாது. போராட்டங்களுக்கு குறித்த காலமும், இடமும் ஒதுக்கப்பட வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், டில்லியில் பண்டிகைக் காலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருவதை தடுக்கக் கோரி வணிகர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது மத்திய அரசு விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தசரா மற்றும் தீபாவளி பண்டிகைக்காலத்தில் டில்லியில் அதிகளவில் வணிகம் நடக்கும். இவ்வாண்டு, எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டியும், தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஸ்வர் பதவி விலக வலியுறுத்தியும், கரப்பான் பூச்சி கட்சியின், காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதை எதிர்த்து, பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பிலும் பேரணி, போராட்டங்கள் நடந்து வருகின்றன.
பண்டிகை காலத்தில் இது போன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடப்பதை தடுத்து நிறுத்தக்கோரி, பல்வேறு வணிகர்கள் அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாகசி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இதில், ‘டில்லி கிரானா கமிட்டி’ சார்பில் தாக்கல் செய்த மனு நேற்று விசாரிக்கப்பட்டது.
வணிகர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதிடுகையில், ‘‘போராட்டக் களத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில், 50 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தற்போது அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. கன்னாட் பிளேஸ் பகுதி யாரும் இல்லாமல் வெறிச்சோடி இருக்கிறது,’’ என்று தெரிவித்தார்.
நீதிபதிகள் கூறியதாவது:
தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டங்களளை எடுத்துச் செல்லும் அமைப்புகளை, இவ்வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தால் எந்த முடிவும் எடுக்க முடியாது.
ஒரு போராட்டக்களத்தை, எப்போதுமே ஆக்கிரமித்து வைத்திருக்க முடியாது. விவசாயிகள், பத்திரிகையாளர்கள் போன்றவர்கள் போராட்டம் நடத்த எங்கே செல்வர். அனைவருக்கும் போராடும் உரிமை உண்டு. போராட்டத்திற்கென குறிப்பிட்ட காலமும், இடமும் ஒதுக்கப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசும், சம்பந்தப்பட்ட அமைப்புகளும் விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு நீதிதிபதிகள் கூறினர்.
