பஞ்சாபி பாக் அருகே புது மேம்பாலம் பொதுப்பணித் துறை ஆய்வு
பஞ்சாபி பாக் அருகே புது மேம்பாலம் பொதுப்பணித் துறை ஆய்வு
ADDED : ஜன 25, 2026 07:00 AM

புதுடில்லி: பஞ்சாபி பாக் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, வெளிவட்டச் சாலையில் புதிய மேம்பாலம் கட்ட பொதுப்பணித் துறை முடிவு செய்துள்ளது.
வடமேற்கு டில்லியில் பஞ்சாபி பாக், கேஷோபூர், ஹைதர்பூர், பீதம்புரா, ஷாலிமார் பாக், ரோஹிணி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த கேஷோபூர் டிப்போ அருகே துணை வடிகாலையும் ஹைதர்பூரையும் இணைக்கும் வகையில், புதிய மேம்பாலம் கட்ட பொதுப்பணித் துறை முடிவு செய்துள்ளது.
இதற்கான ஆய்வுப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. வடிவமைப்பு, சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த தன்மை ஆகியவற்றை பொதுப்பணித் துறை பொறியாளர்கள் விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர். எதிர்கால தேவைக்கு ஏற்றதாகவும், தாமதமின்றியும் மேம்பாலம் கட்டவும் ஆலோசனை நடக்கிறது.
இந்த தகவலை, டில்லி அரசின் பொதுப்பணித் துறை அமைச்சர் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா தெரிவித்து உள்ளார்.

