கத்தார் மன்னருக்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு!
கத்தார் மன்னருக்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு!
UPDATED : பிப் 18, 2025 12:35 PM
ADDED : பிப் 18, 2025 11:26 AM

புதுடில்லி: டில்லி ஜனாதிபதி மாளிகையில், கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
வளைகுடா நாடான கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானி, இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.


அவரை, நேற்று பிரதமர் மோடி, டில்லி விமான நிலையத்தில் சென்று நேரில் வரவேற்றார். இந்நிலையில், இன்று (பிப்.,18) டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், கத்தார் மன்னார் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரிடம் கத்தார் மன்னர் பேச்சு நடத்துகிறார். இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பிறகு இருநாட்டு தலைவர்களும் செய்தியாளர்களை சந்திப்பார்கள். இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

