sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிரம்மோஸ், ஆகாஷ், சூர்யாஸ்த்ரா... இந்திய ராணுவ வல்லமையை பறைசாற்றிய குடியரசு தின அணிவகுப்பு

/

பிரம்மோஸ், ஆகாஷ், சூர்யாஸ்த்ரா... இந்திய ராணுவ வல்லமையை பறைசாற்றிய குடியரசு தின அணிவகுப்பு

பிரம்மோஸ், ஆகாஷ், சூர்யாஸ்த்ரா... இந்திய ராணுவ வல்லமையை பறைசாற்றிய குடியரசு தின அணிவகுப்பு

பிரம்மோஸ், ஆகாஷ், சூர்யாஸ்த்ரா... இந்திய ராணுவ வல்லமையை பறைசாற்றிய குடியரசு தின அணிவகுப்பு

2


UPDATED : ஜன 26, 2026 04:47 PM

ADDED : ஜன 26, 2026 10:57 AM

Google News

UPDATED : ஜன 26, 2026 04:47 PM ADDED : ஜன 26, 2026 10:57 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: குடியரசு தினத்தையொட்டி, டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடி ஏற்றினார். இந்த விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து நடந்த அணிவகுப்பில் இந்திய ராணுவத்தின் வல்லமையை பறைசாற்றும் ஆயுதங்கள், ஏவுகணைகள் இடம்பெற்று இருந்தன.

நாட்டின் 77வது குடியரசு தினவிழா இன்று (ஜனவரி 26) கோலாகலமாக நடந்தது. ஜனாதிபதி மாளிகையில் இருந்து திரவுபதி முர்மு பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்டார். அவரை பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் டில்லியில் உள்ள கடமை பாதையில் திரவுபதி முர்மு மூவர்ண கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். Image 1526935 Image 1526936

Image 1526937 Image 1526938 Image 1526939

இந்த விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.Image 1526932

சிபிஆர் பங்கேற்பு

குடியரசு தினவிழாவில் பங்கேற்க வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை கை குலுக்கி பிரதமர் மோடி வரவேற்றனர். சில வினாடிகள் இருவரும் தங்களது அன்பை பரிமாறி கொண்டனர். புதுடில்லி முழுதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அசோக சக்ரா விருது

நாட்டின் உயரிய வீரதீர விருதுகளில் ஒன்றான அசோக சக்ரா விருதை விண்வெளி நாயகன் சுபான்ஷூ சுக்லாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.

Image 1526933

அணிவகுப்பு

நாட்டின் ராணுவ பலம், கலாசாரம் ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு நடத்தப்பட்டது. பல்வேறு துறை சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார அணிவகுப்பு ஊர்திகள் இடம் பெற்றிருந்தன. பிரமோஸ், ஆகாஷ், சூர்யாஸ்த்ரா, அர்ஜுன் உள்ளிட்ட ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் முக்கிய பங்கு வகித்த ஏவுகணைகள், ஆயுதங்கள், ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள் அணிவகுப்பு நடந்தது.Image 1526930

Image 1526931

மரியாதை

முன்னதாக, டில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தியாகிகள் நினைவிடத்தில் பிரதமர் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள் வரவேற்பு அளித்தனர்.Image 1526934

தினமலர் நேரலை

டில்லியில் நடந்த குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடி ஏற்றினார். கண்கவரும் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த விழாவில் தினமலர் யுடியூப் மற்றும் செப்சைட்டில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us