உள்ளடக்கத்திற்கு செல்ல
ரூ.17 கோடி கள்ள நோட்டு முக்கிய குற்றவாளிகள் சிக்கினர்
ரூ.17 கோடி கள்ள நோட்டு முக்கிய குற்றவாளிகள் சிக்கினர்
UPDATED : அக் 22, 2026 08:11 PM
ADDED : அக் 22, 2026 08:06 PM
அ நிறம் | அளவு
புதுடில்லி: உத்தர பிரதேசத்தின் சஹாரன்புரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளை ஒன்றில் இருந்த பணப்பெட்டகத்தில், ஆக., 29ல், 17 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் மீட்கப்பட்டன.
சஹாரன்புர் போலீசார் விசாரித்தனர். இந்த மோசடி குறித்து விசாரித்த என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, முக்கிய குற்றவாளியான ஆதேஷ் சவுத்ரி, அமித் குமார், முகேஷ் குமார், ராஜேந்தர், நீட்டு ஆகியோரை கைது செய்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய அஜய் குமார் என்பவரை ஹரியானாவின் அம்பாலாவிலும், ஹரிஷ் ரவுண்டா என்பவரை ஹிமாச்சலின் மணாலியிலும் என்.ஐ.ஏ., நேற்று கைது செய்தது. இவர்கள், ஏற்கனவே கைதான ஆதேஷ் சவுத்ரியின் நெருங்கிய கூட்டாளிகள் என்பது தெரிய வந்தது.
