ADDED : ஜூலை 02, 2025 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அய்ஸ்வால் : தடைசெய்யப்பட்ட 6.67 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்ஆம் பெட்டமைன் போதை மாத்திரைகளை மிசோரமில் பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக மியான்மரை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.
வடகிழக்கு மாநிலமான மிசோரமின் சம்பாய் மாவட்டத்தில் போதை பொருள் புழக்கத்தில் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அசாம் ரைபிள்ஸ் போலீசார், மிசோரம் போலீசார் உதவியுடன் சொகாவ்தார் கிராமத்தில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்தனர்.
அப்போது மியான்மரில் இருந்து வந்த நபரை சோதனை யிட்டபோது, நம் நாட்டில் தடை செய்யப்பட்ட, நரம்பு மண்டலத்தை பாதிக்கும் மெத் ஆம் பெட்டமைன் போதை மாத்திரைகள் 2.22 கிலோ அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டன.
இதன் மதிப்பு 6.67 கோடி ரூபாய். மாத்திரை வைத்திருந்த அவரை கைது செய்தனர்.