தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/வீணாவுக்கு சீட்! மடாதபதி மிரட்டல்

வீணாவுக்கு சீட்! மடாதபதி மிரட்டல்

வீணாவுக்கு சீட்! மடாதபதி மிரட்டல்


ADDED : மார் 21, 2024 03:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2024 03:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பாகல்கோட் லோக்சபா தொகுதியில் போட்டியிட வீணாவுக்கு சீட் வழங்காவிட்டால், பஞ்சமசாலி சமுதாயம், காங்கிரசுக்கு தக்க பாடம் கற்பிக்கும்,'' என, கூடலசங்கம மடாதபதி ஜெய மிருதுஞ்செயா சுவாமிகள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகல்கோட் லோக்சபா தொகுதில் 2019ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் வீணா காசப்பனவர். இம்முறை தேர்தலில் 'சீட்' பெறுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், முன்னாள் அமைச்சர் சிவானந்த பாட்டீலின் மகள் சம்யுக்தாவுக்கு சீட் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்த நிலையில், வீணா, அவரது கணவரும் எம்.எல்.ஏ.,வுமான விஜயானந்த் காசப்பனவர், கூடலசங்கம மடாதபதி ஜெய மிருதுஞ்செயா சுவாமிகள் ஆகியோர், நேற்று புதுடில்லியில், காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து, சீட் கேட்டனர்.

கூட்டம் முடிந்த பின், கண்ணீர் மல்க வீணா வெளியே வந்தார். கூடலசங்கம மடாதபதி ஜெய மிருதுஞ்செயா சுவாமிகள் கூறுகையில், ''பாகல்கோட் லோக்சபா தொகுதியில் போட்டியிட வீணாவுக்கு சீட் வழங்காவிட்டால், பஞ்சமசாலி சமுதாயம், காங்கிரசுக்கு தக்க பாடம் கற்பிக்கும்,'' என்றார்.

பா.ஜ.,வில் வேட்பாளர்கள் அறிவித்த பின், அதிருப்தி என்றால், காங்கிரசில் அறிவிப்பதற்கு முன்னரே அதிருப்தி வெடித்துள்ளது

.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us