ADDED : ஜூலை 16, 2025 10:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டில்லி மாநகரப் போலீசின் சைபர் கிரைம் பிரிவு நிபுணர் ஒருவர் கூறியதாவது:
பள்ளி, கல்லுாரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் இ - மெயில் அனுப்புபவர், 'டார்க் நெட்' எனப்படும் மறைகுறியாக்கப்பட்ட இணையத்தை பயன்படுத்துகிறார். சைபர் குற்றம், மனித கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களை செய்பவர்கள் டார்க் நெட் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். டார்க் நெட் பயன்படுத்துபவரை கண்காணிப்பது கண்ணாடி அறைக்குள் நிழலைத் துரத்துவது போன்றது. ஒரு தடயத்தைக் கண்டுபிடித்ததாக நினைக்கும் தருணத்தில், அது  மற்றொரு அடுக்கில் மறைந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

