நியூயார்க் டைம் சதுக்கத்தில் துப்பாக்கி சூடு: பலர் காயம்
நியூயார்க் டைம் சதுக்கத்தில் துப்பாக்கி சூடு: பலர் காயம்
ADDED : ஆக 10, 2025 01:25 AM
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபல டைம் சதுக்கத்தில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் காயமடைந்தனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகர அடையாளங்களில் ஒன்று டைம் சதுக்கம். இங்கு எப்போதுமே கூட்டம் அலைமோதும். இங்கு நேற்று அதிகாலை வாகனத்தில் வந்த நபர் ஒருவர் கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
சத்தம் கேட்டு அனைவரும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேரும், முண்டியடித்து ஓடியதால் பலரும் காயமடைந்தனர்.
உடனடியாக தாக்குதல் நடந்த இடத்துக்கு விரைந்த போலீசார், துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுற்றிவளைத்து பிடித்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடக்கிறது.
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடக்கும்.