தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மாநில வர்த்தக செய்திகள்

மாநில வர்த்தக செய்திகள்

மாநில வர்த்தக செய்திகள்


UPDATED : அக் 01, 2026 02:55 PM

ADDED : அக் 01, 2026 10:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 01, 2026 02:55 PM ADDED : அக் 01, 2026 10:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேளாண் சந்தை உள்கட்டமைப்பை வலுப்படுத்த ராஜஸ்தான் மும்முரம்

ராஜஸ்தான் முழுவதும் உள்ள 30 விவசாய உற்பத்தி சந்தை குழுக்களுக்கு 57.41 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை துவக்க ராஜஸ்தான் மாநில முதல்வர் பஜன்லால் சர்மா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், வேளாண் சந்தை வளாகங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மாநில அரசின் முன்னுரிமையாக இருந்து வருகிறது. தங்கள் விளைபொருட்களை சந்தைகளுக்கு கொண்டு வரும் விவசாயிகளுக்கு நேரடியாக மேம்பாட்டு பணிகள் பயனளிக்கும் என்றார்.

அரசால் அனுமதிக்கப்பட்ட திட்டங்களில் சந்தை வளாகங்களை கட்டுதல், மண்டிகளில் மின்சார உள்கட்டமைப்பு ஏற்படுத்துதல், அணுகு சாலைகள் அமைத்தல் மற்றும் விவசாய சந்தைகளை இணைக்கும் சேதமடைந்த நீண்ட தூர சாலை தொடர்பை பழுதுபார்த்தல் ஆகியவை அடங்கும்.

இந்த நடவடிக்கைகள் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, விவசாய விளைபொருட்களின் போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்தலை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'ட்ரோன்' தலைநகராக ஹரியானா உருவாக்க முதல்வர் திட்டம்

ஹரியானாவை நாட்டின் ட்ரோன் தலைநகராக உருவாக்கும் நோக்கத்துடன், ட்ரோன் துறையில் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் அரசு கவனம் செலுத்தும் என்று அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி கூறினார்.

மாநில செயலகத்தில் பல்வேறு துறைகளின் சிறந்த நடைமுறைகளை மதிப்பாய்வு செய்யும் கூட்டத்தில் பேசிய அவர், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பாதுகாப்பு, விவசாயம், தொழில், கண்காணிப்பு மற்றும் பிற துறைகளில் ட்ரோன்களுக்கான வளர்ந்து வரும் தேவை, அதிக வாய்ப்புகளை திறந்துள்ளது என்றார்.

வளர்ந்து வரும் துறைக்கு தேவையான திறன்களுடன் இளைஞர்களை ஊக்கப்படுத்தி, ஸ்டார்ட்அப்களை ஆதரிக்கவும், தொழில்நுட்ப கல்வியை வலுப்படுத்தவும் மாநிலம் செயல்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச வர்த்தக கண்காட்சி; உத்தர பிரதேசத்தில் நிறைவு

நொய்டாவில் முடிவடைந்த உத்தர பிரதேச சர்வதேச வர்த்தக கண்காட்சியின் நான்காவது பதிப்பில் 6,500 கோடி ரூபாய் மதிப்பிலான 4,400 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் 15,500 கோடி ரூபாய் முதலீடு எதிர்பார்க்கப்படுவதாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

இந்த வர்த்தக கண்காட்சி, மாநிலத்தின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், மற்றும் உற்பத்தியாளர்களுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச வாங்குவோருடன் இணைவதற்கான ஒரு சிறந்த தளத்தை வழங்கியதாக அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களின்படி, நிகழ்வின்போது 41,500 பி2பி மற்றும் வணிக சந்திப்புகள் பதிவானது என்று தெரிவிக்க பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us