ADDED : செப் 19, 2026 11:44 PM
புதுடில்லி: ‘மானிய விலையில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் பெற, அக்., 1 முதல் ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயம்’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மானியத்துடன் கூடிய நிர்ணயிக்கப்பட்ட விலையில் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள், ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடித்திருக்க வேண்டும். மானிய காஸ் சிலிண்டர்கள் தகுதியான குடும்பங்களுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்வதுடன், போலி மற்றும் தகுதியற்ற காஸ் இணைப்புகளை கண்டறியவும், மானிய சிலிண்டர்கள் வணிக பயன்பாட்டுக்கு திருப்பி விடப்படுவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, 27.43 கோடி வாடிக்கையாளர்கள் ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடித்துள்ளனர். அவர்கள் மீண்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள தேவையில்லை. மற்ற வாடிக்கையாளர்கள் காஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும்போது, வினியோகஸ்தர் அலுவலகத்தில் அல்லது எண்ணெய் நிறுவனங்களின் மொபைல் செயலிகள் மூலம் சரிபார்ப்பை முடிக்க வேண்டும்.
