ADDED : செப் 19, 2026 11:44 PM
புதுச்சேரி: புதுச்சேரி மரப்பாலம் சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பேனர் திடீரென சரிந்து விழுந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
புதுச்சேரி மரப்பாலம் சந்திப்பு வாகன போக்குவரத்து மிகுந்து எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் நேற்று இரவு கன மழை பெய்ததால், மரப்பாலம் சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட பேனர் ஒன்று சரிந்து சாலையில் விழுந்தது.
அவ்வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதே பகுதியில் கடந்த மாதம் பேனர் சரிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. இனியாவது அதிகாரிகள் விழித்துக் கொண்டு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வைக்கப்படும் சட்டவிரோத பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும். விபத்து நடந்த பிறகு இழப்பீடு வழங்குவதை விட, விபத்து நடக்கும் முன்பே தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
