தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/‘சூப்பர் நோவா’ 43வது மாடியில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை

‘சூப்பர் நோவா’ 43வது மாடியில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை

‘சூப்பர் நோவா’ 43வது மாடியில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை


UPDATED : அக் 04, 2026 12:00 AM

ADDED : அக் 03, 2026 05:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 12:00 AM ADDED : அக் 03, 2026 05:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: நொய்டாவின், செக்டார் 94-ல் உள்ள, ‘சூப்பர்நோவா ஸ்பைரா’ என்ற உயரமான கட்டடத்தின், 43-வது மாடியில் உள்ள பால்கனியிலிருந்து கீழே விழுந்து, 29 வயதுடைய நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

'ஸ்பைரா' கோபுரம் நொய்டாவின் மிக உயரமான கட்டடமாக, ‘ஸ்பைரா’ கோபுரம் திகழ்கிறது. இது டில்லி மெட்ரோ ரயிலின், மெஜந்தா லைனில் உள்ள ஓக்லா பறவைகள் சரணாலய நிலையத்திற்கு அருகில், நொய்டா- – கிரேட்டர் நொய்டா விரைவுச்சாலைக்கு ஒட்டியுள்ள நிலப்பரப்பில் கட்டப்பட்டு வரும் ‘‘சூப்பர்டெக்‘ நிறுவனத்தின், 'சூப்பர்நோவா' திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

குர்கான் பகுதியை சேர்ந்தவர், குறுகிய கால வாடகையில் தங்குவதற்காக, அந்த கட்டடத்தில் அறை எடுத்துள்ளார். அந்த நபர் நிதி நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டு, மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் கட்டடத்தின் 43வது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து திடீரென கிழே குதித்தார். அவர் கீழே விழுவதற்கு முன் சிலர் அவரை காப்பாற்ற முயற்சிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ள வீடியோ, போலீசாரிடம் கிடைத்துள்ளது.

சம்பவம் குறித்து அறிந்ததும் அங்கு விரைந்த போலீசார், சம்பவ இடங்களில் உள்ள தடயங்களை சேகரித்தனர். உயிரிழந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us