தேர்தல் பத்திரங்களின் பிரத்யேக எண்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு
தேர்தல் பத்திரங்களின் பிரத்யேக எண்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு
ADDED : மார் 15, 2024 02:15 PM

புதுடில்லி: தேர்தல் பத்திரங்களின் பிரத்யேக எண்களை வெளியிட வேண்டும் என   எஸ்.பி.ஐ., வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
'அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திரங்கள் முறை செல்லாது' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தேர்தல் பத்திரங்கள் விற்பனை, அவற்றை வாங்கியவர்கள், அவற்றில் எவ்வளவு அரசியல் கட்சிகளால் பணமாக்கப்பட்டன போன்ற விபரங்களை தேர்தல் கமிஷனிடம் எஸ்.பி.ஐ., வழங்கியது. இதனை நேற்று இரவு இந்த தகவல்களை தேர்தல் கமிஷன் தன் இணையதளத்தில் வெளியிட்டது.
இந்நிலையில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையில் 5 பேர் கொண்ட அமர்வு முன் இன்று (மார்ச் 15) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், தேர்தல் பத்திர விபரங்களை எஸ்.பி.ஐ., வங்கி முழுமையாக வெளியிடாதது ஏன்? பத்திரங்களின் பிரத்யேக எண் ஏன் குறிப்பிடப்படவில்லை தேர்தல் பத்திரத்தின் எண்கள் தான் அதனை வாங்குபவர்களையும், நன்கொடையைப் பெற்றவர்களையும் இணைக்கக் கூடியது. அதை அளித்தால்தான் விபரங்கள் முழுமை பெறும். எனவே அதனை எஸ்.பி.ஐ., தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

