டி-20 உலகக்கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
டி-20 உலகக்கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
UPDATED : மார் 09, 2026 07:11 AM
ADDED : மார் 08, 2026 11:46 PM

புதுடில்லி: ஐ.சி.சி., ஆண்களுக்கான டி-20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டி20- உலகக்கோப்பை கிரிக்கெட் பைனலில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பை வென்றது. சாம்பியன் ஆன இந்திய அணிக்கு, பிரதமர் மோடி, வாழ்த்து தெரிவித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவு: உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்த அசாதாரண வெற்றி, வீரர்களின் அபாரத் திறமை, உறுதிப்பாடு மற்றும் குழு முயற்சியை பிரதிபலிக்கிறது. இந்தத் தொடர் முழுவதும் அவர்கள் அசாத்தியமான மனவலிமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும், பெருமையாலும், மகிழ்ச்சியாலும் நிரப்பியுள்ளது. இந்திய அணிக்கு வாழ்த்துகள். இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
தலைவர்கள் பாராட்டு:
ஜனாதிபதி முர்மு:
இந்த வெற்றி வரலாற்றுச் சாதனை. நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர்கள், அணியின் நிர்வாகம் மற்றும் ஆதரவு பணியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
சி.பி. ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதி:
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மூன்றாவது டி-20 உலகக் கோப்பை வெற்றி பெற்றதற்கு இந்திய அணிக்கு பாராட்டுக்கள்.
அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர்:
மின்னல் வேகத்தில் சிறப்பான ஆட்டம் ஆடிய இந்திய அணிக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து இருமுறை டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணியான இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்.
ராகுல், எதிர்க்கட்சித் தலைவர்:
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியின் அற்புதமான வெற்றிக்கு பாராட்டுக்கள். சஞ்சு சாம்சன் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
முதல்வர் ஸ்டாலின்:
டி-200 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்; கடந்த 3 போட்டிகளில் சஞ்சு சாம்சன் நிதானமாக பேட்டிங் செய்து, முக்கியமான நேரத்தில் சிறப்பாக விளையாடியதை பார்த்ததில் மகிழ்ச்சியாக இருந்தது

