ADDED : நவ 21, 2024 01:32 AM
மூணாறு:கம்பம்மெட்டில் போக்குவரத்து துறை சார்பில் தற்காலிக செக்போஸ்ட் அமைக்கப்பட உள்ளது.
கேரள, தமிழக எல்லையான கம்பம்மெட்டில் போக்குவரத்துதுறை சார்பில் செக்போஸ்ட், அங்குள்ள கால்நடை பாதுகாப்புதுறை கட்டடத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டது. அங்கு கட்டுமான பணிகள் ஆரம்பித்ததால், கடந்தாண்டு முதல் செக்போஸ்ட் செயல்படவில்லை. அதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.
குறிப்பாக வாகனங்களுக்கு பெர்மிட், வரி, செஸ் ஆகியவை சரிபார்க்க இயலாமல் போனது.
அதனால் அரசுக்கு வருவாய் இழப்பு கடுமையாக ஏற்பட்டதுடன், முறையாக ஆவணங்கள் இன்றி விபத்துகளில் சிக்கும் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் உள்பட எவ்வித இழப்பீடு தொகையும் பெற இயலாத நிலை ஏற்பட்டது.
அதனால் கம்பம்மெட்டில் போக்குவரத்து துறை சார்பில் செக்போஸ்ட் அமைக்குமாறு ஐயப்பா சேவா சங்கம் உள்பட பல்வேறு அமைப்பினர் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து சபரிமலை மண்டல, மகர விளக்கு உற்ஸவம் துவங்கியதால், கம்பம்மெட்டில் தற்காலிக செக்போஸ்ட் அமைக்குமாறு போக்குவரத்துதுறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

