ADDED : டிச 03, 2024 06:21 PM

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி, என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி காஷ்மீரின் கந்தர்பாலில் உள்ள ககங்கீரில் உள்ள கட்டுமான தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு மருத்துவர் மற்றும் ஆறு கட்டுமான தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தீவிரமாக வேட்டையில் இறங்கினர்.
இது குறித்து காஷ்மீர் மண்டல போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:
ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து தாக்குதல் வேட்டையை நடத்தினோம். இதன்படி, தச்சிகாமின் மேல் பகுதியில் நடந்து வரும் என்கவுன்டரில் பயங்கரவாதி ஜுனைத் அகமது பட் கொல்லப்பட்டான்.
இவன், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவன். வெவ்வேறு இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டவன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.