காஷ்மீரில் குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல்
காஷ்மீரில் குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல்
ADDED : நவ 04, 2024 03:31 AM

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் மக்கள் நடமாட்டம், மிகுந்த மார்க்கெட் பகுதியில், கையெறி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு பெண்கள் உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர்.
ஜம்மு - காஷ்மீரில் ஸ்ரீநகரின் சுற்றுலா வரவேற்பு மையம் அருகே மார்க்கெட் இயங்கி வருகிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த பகுதியில், திடீரென கையெறி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தி தப்பியோடினர். இந்த தாக்குதலில், அந்த பகுதியில் இரண்டு பெண்கள் உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர், அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையே, சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணியையும் பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில் ஸ்ரீநகர் அருகே நேற்று முன்தினம் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி தரும் வகையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.