தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதிகளை மட்டுமே கணக்கெடுக்க முடிவு?

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதிகளை மட்டுமே கணக்கெடுக்க முடிவு?

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதிகளை மட்டுமே கணக்கெடுக்க முடிவு?


ADDED : ஜூன் 08, 2025 12:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2025 12:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு வரும் 2027ல் நடத்தப்பட உள்ள நிலையில், ஜாதிகளை மட்டுமே கணக்கிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'சென்சஸ்' எனப்படும், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கடைசியாக, கடந்த 2011ல் நடத்தப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக, 2021ல் நடக்கவில்லை.

நான்கு ஆண்டுகளாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், அதை உடனடியாக நடத்த வேண்டும் என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

அதேசமயம், ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டன.

இந்நிலையில், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு வரும் 2027 மார்ச் 1ம் தேதி முதல் நடத்தப்படும் என்றும், அதோடு சேர்த்து ஜாதிவாரியான கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்றும், மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதிகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு மாநிலத்தில், ஓ.பி.சி., என வகைப்படுத்தப்பட்ட பிரிவு, மற்றொரு மாநிலத்தில் பொதுப்பிரிவில் வருகிறது.

ஜாதி வகுப்புகளை பிரிப்பதில் மாநிலங்கள் இடையே பாகுபாடு நிலவுவதால், ஜாதிகளை மட்டுமே கணக்கிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

நெறிமுறைப்படி, ஒவ்வொரு தனிநபரும், தங்கள் ஜாதியை மதத்துடன் குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ள வழக்கமாக ஐந்து ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்த முறை டிஜிட்டல் முறையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால், அது மூன்று ஆண்டுகளில் நிறைவடையும் என கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us