ADDED : டிச 15, 2024 12:24 AM
தி.மு.க., - எம்.பி., ராஜா லோக்சபாவில் பேசும்போது, ''அரசியலமைப்பு சட்டப்பதவிகளின் வரிசை பட்டியலில் இரண்டாவதாக உள்ள அதிகாரம் மிக்க பதவியில் உள்ள நபர், 'நாங்கள் 400 இடங்களுக்கு மேல் தேர்தலில் வெற்றி பெற்றால், அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம்' என்று அரசு நிகழ்ச்சியில் கூறினாரே. அப்போது எங்கே போனது அரசியல்அமைப்பு சட்டத்தின் மீதான உங்களின் மதிப்பு,'' என்றதும், சபையில் பிரச்னை வெடித்தது.
இதையடுத்து, ''எந்த கூட்டணியில் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல; என்ன நோக்கத்திற்காக காங்கிரசோடு இருக்கிறோம் என்பதே முக்கியம். மதசார்பின்மை அரசு என்று அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடாததற்கு, பா.ஜ.,வினரைப் போன்ற மோசமான ஆட்கள் அதிகாரத்திற்கு வரமாட்டார்கள் என்ற நம்பிக்கை அப்போது இருந்தது தான் காரணம்,'' என்று ராஜா கூறவே, மீண்டும் சபை கொந்தளித்தது. இதற்கு பின், சாவர்க்கர் பற்றி ராஜா பேசியதற்கும், பா.ஜ., உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.