மூணாறில் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப பிரதிபலிக்கும் வானம்
மூணாறில் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப பிரதிபலிக்கும் வானம்
ADDED : மார் 19, 2025 03:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு:மூணாறில் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப வானம் பிரதிபலித்து வருகிறது.
மூணாறில் தற்போது கோடை காலம் என்றபோதும் மூன்று விதமான தட்ப வெப்ப நிலை நிலவுகிறது.
கோடை காலங்களில் காலை வேளையில் குறைந்தபட்ச வெப்ப நிலை 15 டிகிரி செல்சியசுக்கு கூடுதலாக காணப்படும். இந்தாண்டு வழக்கத்துக்கு மாறாக 2 டிகிரி முதல் 10 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது.
அதனால் காலை வேளையில் குளிர் சற்று அதிகரித்து காணப்படுகிறது. மதியம் வரை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் அதன் பின் கோடை மழை பெய்கிறது.
ஒரே நாளில் மூன்று விதமான தட்ப வெப்ப நிலை நிலவுவதால், அதற்கு ஏற்ப வானமும் பிரதிபலிகிறது.
காலை வேளையில் குளிருக்கு ஏற்ப மேக கூட்டங்கள், வெயிலுக்கு ஏற்ப 'பளிச்' எனவும், மழைக்கு இருண்ட நிலையிலும் காணப்படுகிறது.