ADDED : மே 24, 2025 03:04 AM
மும்பை: மஹாராஷ்டிராவில் மருத்துவ மாணவியை சக மாணவர்களே கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவியை சேர்ந்த 22 வயது மாணவி, மஹாராஷ்டிராவின் சாங்கிலியில் உள்ள மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 18ம் தேதி இரவில் சாங்கிலியில் உள்ள தியேட்டரில் வகுப்பு தோழர்கள் மூவருடன் சினிமா பார்ப்பதற்காக, அந்த மாணவி சென்றார்.
வழியில், தாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கு மாணவியை அவர்கள் அழைத்து சென்றனர். அங்கு மது அருந்திய மாணவர்கள், மாணவிக்கும் மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்தனர்.
இதை குடித்த மாணவி சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார். அந்த மாணவியை, நண்பர்கள் மூவரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தனர். இது குறித்து வெளியே சொல்லக்கூடாது என்றும் மாணவியை மிரட்டினர்.
பாதிக்கப்பட்ட மாணவி, இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில், கூட்டு பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் மூன்று மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.