ADDED : மார் 29, 2025 07:17 PM
சண்டிகர்:பஞ்சாபில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மற்றும் ஆயுதக் கடத்தல் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து, பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறியதாவது:
சட்டவிரோதமாக ஆயுதங்கள் மற்றும் பணப்பரிமாற்றம் செய்யும் கும்பலைப் பிடிக்க போலீசார் முடுக்கி விடப்பட்டனர். அமிர்தசரஸ் புறநகர் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடத்தல்காரர்களுடன் தொடர்புள்ள, பாபா என்ற ஜக்ரூப் சிங், ஹர்தீப் சிங், குல்லு என்ற ராஜ்பீர் சிங் மற்றும் ரசல் சிங் என்ற அர்சல் சிங் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 9 கைத்துப்பாக்கிகள், துப்பாக்கிக் குண்டுகள் மற்றும் 3.5 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அமிர்தசரஸ் கரிண்டா போலீசார் வழக்குப் பதிவு செய்து, நான்கு பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.