ADDED : மார் 16, 2025 11:40 PM
மஹாதேவபுரா: குடித்து விட்டு வாகனம் ஓட்டியதை தட்டி கேட்ட பெண் போலீசை தாக்கியதாக, பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு மஹாதேவபுரா போலீசார், கே.ஆர்., புரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமமூர்த்தி நகரில் இருந்து பெண் தோழியுடன் வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தினர்.
வாகனத்தை ஓட்டிய நபர் குடிபோதையில் இருந்தார். இதையறிந்த போலீசார், நாளை (நேற்று) காலை போலீஸ் நிலையத்துக்கு வரும்படி தெரிவித்தனர்.
பலமுறை கூறியும், பைக்கை ஓட்டிய ராகேஷ் குமார், அங்கிருந்து நகராமல், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில், எஸ்.ஐ., அனிதா குமாரியை தாக்கினார். அங்கிருந்த மற்ற போலீசார், ராகேஷ் குமாரையும், அவரது பெண் தோழியையும் கைது செய்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவர்கள் மீது, பணியில் இருந்த அரசு ஊழியரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.