ADDED : ஜூன் 28, 2025 08:30 PM
புதுடில்லி:தடை செய்யப்பட்ட சீன மாஞ்சா நுால், 1,100 உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர்.
பட்டம் பறக்க விடுவோர், மாஞ்சா நுால் பயன்படுத்த டில்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீன மஞ்சா நுாலில் கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் துகள்கள் பூசப்பட்டு இருப்பதால், மனிதர்களை உயிர்பலி வாங்கும் தன்மை கொண்டது.
உத்தம் நகர் சோம் பஜார் சாலையில் ஒரு கடை மற்றும் கிடங்கில் போலீஸ் நடத்திய சோதனையில், 922 சீன மாஞ்சா நுால் உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளர் ராஜு சவுராஸியா,51, கைது செய்யப்பட்டார்.
சீன மாஞ்சாவை, 'ஆன் - லைன்' வாயிலாகவும் விற்பதாக சவுராஸியா ஒப்புக்கொண்டார். அவர் மீது ஏற்கனவே, 2022ம் ஆண்டு இதே குற்றச்சாட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.
ராம்லீலா மைதானம் அருகே கம்லா மார்கெட்டில் அரீப் கான், 22, கைது செய்யப்பட்டு, 248 உருளைகள் சீன மாஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.