ADDED : அக் 26, 2025 11:49 PM
பாரிஸ்: பாரிஸ் அருங்காட்சியகத்தில் இருந்த கிரீட நகைகளை திருடியதாக சந்தேகப்படும் இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஐரோப்பிய நாடான பிரான்சின் தலைநகர் பாரிசில் உள்ள லுாவ்ரோ அருங்காட்சியகத்தில் இருந்து சமீபத்தில், கிரீட நகைகளை வெறும் 8 நிமிடங்களுக்குள் திருடிச் சென்றுள்ளனர்.
திருட்டு நடந்து ஒருவாரத்துக்கு பின் நேற்று முன்தினம் இத்திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், பாரிசின் புறநகர் பகுதியான செய்ன் - செயின்ட் - டெனிசைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்து உள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது விமான நிலையத்தில் பிடிபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட இருவரும் தற்போது காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டனவா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாக வில்லை.

