பள்ளத்தாக்கில் கார் கவிழுந்து மூதாட்டி உள்பட இருவர் பலி
பள்ளத்தாக்கில் கார் கவிழுந்து மூதாட்டி உள்பட இருவர் பலி
UPDATED : அக் 15, 2026 03:50 PM
ADDED : அக் 15, 2026 03:36 PM
தேவபிரயாகை: உத்தரகண்ட் மாநிலம், தேவ பிரயாகையில், யாத்திரை சென்றவர்களின் கார், பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில், இருவர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மூன்று பேர் மீட்கப்பட்டனர்.
பஞ்சாப் மாநிலம், சண்டிகரிலிருந்து, உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாகை நோக்கி, சமோலி மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேர் ஒரு காரில் சென்று கொண்டு இருந்தனர். சமோலி மாவட்டத்தை சேர்ந்த சத்யேஸ்வரி தேவி, 72, ருத்ரபிராயகை சேர்ந்த உத்தம் சிங், 33, திஷா ராவத், 18, சுனிதா தேவி, 45 ஆகியோர் காரில் சென்றனர். காரை அனில், 33 என்பவர் ஓட்டினார். ரிஷிகேஷ் - -பத்ரிநாத் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, 150 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில், ஆற்றங்கரையை நோக்கி விழுந்தது.இதில் சத்யேஸ்வரி தேவி என்ற மூதாட்டியும், ஓட்டுனர் அனில் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தனர்.
கடினமான புவியியல் அமைப்பு மற்றும் ஆற்றில் நீரோட்டம் இருந்தாதல், மீட்பு பணிகளில் போலீசார் மட்டுமின்றி, மாநில மீட்பு பணடையினரும் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களை படகு மூலம், ஆற்றங்கரைக்கு கொண்டு வந்தனர். காரில், படுகாயங்களுடன் சிக்கியிருந்த மூவரும் மீட்கப்பட்டு, அங்கிருந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்து வருகிறது.
