ADDED : நவ 06, 2024 07:24 PM
நரேலா: வடமேற்கு டில்லி, அலிபூரில் உள்ள நங்லோய் என்ற இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அலிபூரி, நங்லோய் ஆகிய இரண்டு இடங்களில் திங்கட்கிழமை ரியல் எஸ்டேட் அலுவலகங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு 8:15 மணி அளவில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய இருவர் வர உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, நரேலா பகுதியை போலீசார் சுற்றி வளைத்தனர்.
கேரா குர்த் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் ரத்தோட், 18, மற்றும் ஒரு சிறுவனை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இருவரும் கோகி கும்பலைச் சேர்ந்தவர்கள். பணம் பறிக்கும் முயற்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட ரவுடிகள் யோகேஷ் என்ற துண்டா, மான்டி மான், ராம் நிவாஸ் என்ற மொக்லி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.