ஐ.நா., அமைதி காப்பு தளபதிகள் டில்லி மெட்ரோவில் பயணம்
ஐ.நா., அமைதி காப்பு தளபதிகள் டில்லி மெட்ரோவில் பயணம்
ADDED : அக் 16, 2025 10:05 PM
புதுடில்லி:ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காப்பு படைக்கு, வீரர்களை அனுப்பும் நாடுகளின் பிரதிநிதிகள், டில்லி மெட்ரோவில் பயணம் மேற்கொண்டனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் உத்தரவு படி, பல நாடுகளில் அமைதி காப்பு பணியில், நம் ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, நம் நாடு, ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பிரேசில் போன்ற பல நாடுகள், தங்கள் வீரர்களை, ஐ.நா., அமைதி காப்பு படைக்கு அனுப்பியுள்ளன.
அந்த நாடுகளின் சிறப்பு கூட்டத்தை, டில்லியில் கடந்த, 14 - 16 வரை, ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி தலைமையில் டில்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற, இந்த நாடுகளைச் சேர்ந்த ராணுவ தளபதிகள் மற்றும் பிரதிநிதிகள், சென்ட்ரல் செகரட்டரியேட் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து, லால் குய்லா மெட்ரோ ரயில் நிலையம் வரை, பயணம் மேற்கொண்டனர்.
அவர்களை, டில்லி மெட்ரோ நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் விகாஸ் குமார் வரவேற்றார்.
ஐ.நா., அமைதி காப்பு படைக்கு வீரர்களை அனுப்பும் நாடுகளின் பிரதிநிதிகளுக்கு, நினைவு பரிசை விகாஸ் குமார் வழங்கினார். அப்போது, டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் ஆற்றி வரும் பணிகளை அவர் பட்டியலிட்டார். அவர்கள் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை பாராட்டினர்.