ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் வெற்றி : பிரதமர் மோடி வாழ்த்து
ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் வெற்றி : பிரதமர் மோடி வாழ்த்து
UPDATED : மார் 18, 2024 07:17 PM
ADDED : மார் 18, 2024 06:54 PM

புதுடில்லி: ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற விளாடிமிர் புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
ரஷ்யாவின் தற்போதைய அதிபராக விளாடிமிர் புடின், 71, உள்ளார். இவரது பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில், அதிபர் தேர்தல் கடந்த 15ம் தேதி துவங்கி, மூன்று நாட்களுக்கு நடந்தது. இதில், தற்போதைய அதிபர் விளாடிமிர் புடின் 87 சதவீத ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து மீண்டும் அதிபராக பதவியேற்கிறார்.
விளாடிமிர் புடினுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ‛‛ எக்ஸ்'' வலைதளத்தில் மோடி பதிவேற்றியது,
ரஷ்ய அதிபராக மீண்டும் வெற்றி பெற்றமைக்கு எனது வாழ்த்துக்கள். இந்த வெற்றியால் வரும் காலங்களில் இரு நாடுகளிடையே பரஸ்பரம் , ஒத்துழைப்பு, நட்புறவு மேலும் வலுப்படுத்த இணைந்து செயல்பட எதிர்பார்க்கிறேன். இவ்வாறு மோடி தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

