ADDED : அக் 29, 2024 07:57 AM

ஹாவேரி: ஷிகாவி தொகுதியில் காங்கிரஸ் போட்டி வேட்பாளர், வேட்புமனுவை வாபஸ் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஹாவேரியின் ஷிகாவி தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலுக்கு யாசிர் அகமது கான் பதான் என்பவரை வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது.
இதனால் முன்னாள் எம்.எல்.ஏ., அஜ்ஜம்பீர் காத்ரி கோபம் அடைந்தார். சுயேச்சையாக போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். முதல்வர் சித்தராமையா, அஜ்ஜம்பீர் காத்ரியை அழைத்து பேசி சமாதானம் செய்தார். வேட்புமனுவை திரும்ப பெறும்படி வலியுறுத்தினார்.
இந்நிலையில், அஜ்ஜம்பீர் காத்ரி, பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
இப்போது இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன். ஷிகாவியில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும்.
காங்கிரஸ் வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள யாசிர் அகமது கான் பதானை வேட்புமனுவை வாபஸ் பெறுங்கள் என்று நான் கூறினேன்.
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர் ஜமீர் அகமது கான் ஆகியோரிடம் பேசினேன். சுயேச்சை வேட்பாளராக போட்டியிடலாமா அல்லது வேட்புமனுவை வாபஸ் பெறலாமா என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறேன்.
கட்சி எனக்கு முக்கியம். ஆனால், எனது ஆதரவாளர்களை கைவிட்டு விட முடியாது. வேட்புமனுவை வாபஸ் பெற 30ம் தேதி கடைசி நாள். அதுவரை பொறுத்திருந்து பார்ப்பேன். எனது கருத்தை தெரிவிக்க மாட்டேன். அல்லா என்னை பாதுகாப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அஜ்ஜம்பீர் காத்ரி புகைப்படம் அப்லோடு செய்துள்ளேன் சார்.

