sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நிலம்பூரில் வெற்றியை பதிக்குமா இடதுசாரி முன்னணி?

/

நிலம்பூரில் வெற்றியை பதிக்குமா இடதுசாரி முன்னணி?

நிலம்பூரில் வெற்றியை பதிக்குமா இடதுசாரி முன்னணி?

நிலம்பூரில் வெற்றியை பதிக்குமா இடதுசாரி முன்னணி?


ADDED : ஜூன் 19, 2025 04:31 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூர் சட்டசபை தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல். கடந்த சில மாதங்களாகவே கேரள அரசியலில் இத்தொகுதி பேசுபொருளாகி இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம், அந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., அன்வர். 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளும் இடதுசாரி முன்னணி கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ., ஆதரவுடன் சுயேச்சையாக அவர் போட்டியிட்டார்.

விமர்சனம்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாய முன்னணி வேட்பாளர் வி.வி.பிரகாஷை, 2,700 ஓட்டுகள் வித்தியாசத்தில் அன்வர் வென்றார். துவக்கத்தில் முதல்வர் பினராயி விஜயனுடன் இணக்கமாகவே இருந்தார்.

கடந்தாண்டில், பினராயி விஜயன் மற்றும் அவரின் ஆட்சி மீது பல்வேறு விமர்சனங்களை அன்வர் முன்வைத்தார்.

அவ்வப்போது பினராயி விஜயன் மற்றும் அவரின் அமைச்சரவை சகாக்களை சகட்டுமேனிக்கு விமர்சித்து வந்தார். கோழிக்கோடு, நிலம்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடத்தி, பினராயி விஜயன் மற்றும் அவரது அரசின் செயல்பாடுகளை கிழித்தெறிந்தார்.

ஆகையால், இரு தரப்பினரும் முட்டிக் கொண்டனர். இதையடுத்து, திரிணமுல் காங்கிரசில் அன்வர் சேர்ந்தார்; எம்.எல்.ஏ., பதவியை ஜனவரியில் ராஜினாமா செய்தார்.

இதனால், நிலம்பூர் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் கோட்டையான இங்கு, அன்வர் சுயேச்சையாக நின்று வென்றார். காங்கிரஸ் பின்னணி உடைய இவரது குடும்பமும் இதற்கு காரணமாக கருதப்படுகிறது.

இந்த முறை திரிணமுல் காங்., ஆதரவுடன் சுயேச்சையாகவே அவர் களமிறங்கியுள்ளார்.

ஆளும் இடதுசாரி முன்னணி சார்பில் ஸ்வராஜும், காங்கிரஸ் சார்பில் ஆர்யதன் சவுகத்தும் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் முதலில் போட்டியிட தயங்கிய மோகன் ஜார்ஜை பா.ஜ., களமிறக்கியுள்ளது.

முன்னோட்டம்

கேரளாவில், அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு, நிலம்பூர் இடைத்தேர்தல் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

ஆகையால், விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என அன்வரும், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என இடதுசாரி முன்னணி வேட்பாளரும், காங்கிரஸ் கோட்டையை விடக்கூடாது என ஐக்கிய ஜனநாயக முன்னணியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது.

கடந்த கால வரலாற்றை பார்க்கும் போது, இதுவரை வெற்றி பெற்றவர்களில் இருவரைத் தவிர, அனைவரும் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். வெற்றி பெற்ற இரு காங்கிரஸ் வேட்பாளர்களும், இந்திய முஸ்லிம் லீக் கட்சியால் ஆதரிக்கப்பட்டவர்கள்.

இந்த நிலை தொடரும் சூழலில், இடைத்தேர்தலில் மகுடம் சூடப்போவது யார் என்பது வரும் 23ம் தேதி வெளியாகும் முடிவில் தெரியவரும்.

இந்த நிலை தொடரும் சூழலில், இடைத்தேர்தலில் மகுடம் சூடப்போவது யார் என்பது வரும் 23ம் தேதி வெளியாகும் முடிவில் தெரியவரும்.

-நமது சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us