ADDED : ஜூன் 05, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு; பாலக்காடு அருகே, லாரி மோதியதில், ஸ்கூட்டரில் சென்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே, விளயூர் கரிங்கனாடு பகுதியை சேர்ந்தவர் முகமது, 65. கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், இவர் நேற்று காலை, 10:00 மணிக்கு, ஸ்கூட்டரில் பட்டாம்பி- கொப்பம் சாலையில் சென்றார்.
அப்போது, கொப்பம் பகுதியில் பின்னால் வந்த லாரி, ஸ்கூட்டரில் மோதியது. இதில் முகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த கொப்பம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டாம்பி தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.