
புதிய வேலை உறுதி சட்டம் குறித்து, 'இண்டி' கூட்டணியினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். நாட்டின் வளங்களை கொள்ளைஅடித்து, ஏழைகளை பட்டினியில் தள்ளிய எதிர்க்கட்சியினர், கிராமப்புறங்களை வலுப்படுத்த கொண்டு வரப்பட்ட சீர்திருத்தத்தை கேள்வி கேட்கின்றனர். இது கேலிக்கூத்தானது.
- யோகி ஆதித்யநாத், உ.பி., முதல்வர், பா.ஜ.,
கழிப்பறை கட்ட பயன்படுத்துங்க!
மஹாராஷ்டிர மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுவதாக நாங்கள் அறிவித்த உடனே, அனைத்து கட்சிகளும் பயந்து விட்டன. ஓட்டுகளை பெற வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்கின்றன. இந்த பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள். அது சட்ட விரோதமானது எனக் கருதினால், கழிப்பறை கட்ட பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
- அசாதுதீன் ஓவைசி, தலைவர், ஏ.ஐ.எம்.ஐ.எம்.,
மம்தா நாடகமாடுகிறார்!
வாக்காளர் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். நீதிமன்றத்தை நாடினால் என்ன நடக்கும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். இருந்தும், ஓட்டு வங்கிக்காக அவர் அரசியல் நாடகமாடுகிறார். ஊடுருவல்காரர்களுக்கு அவர் வக்காலத்து வாங்குகிறார்.
- சமிக் பட்டாச்சார்யா, மேற்கு வங்க பா.ஜ., தலைவர்

