/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
ஆபரேஷன்ஸ் ரிசர்ச் துறை அறிமுகம்
/
ஆபரேஷன்ஸ் ரிசர்ச் துறை அறிமுகம்
டிச 20, 2008 12:00 AM
டிச 20, 2008 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்றாடம் மாறும் பொருளாதார தொழில்நுட்ப மாற்றங்கள் நிறுவனங்களின் போக்கையே மாற்றிவிடும் தன்மை கொண்டுள்ளன. ஒரு நிறுவனம் எதிர்கொள்ளும் கடுமையான மற்றும் சிக்கலான பிரச்னைகளை இனம் கண்டு, நிர்வாகத்திற்கான முக்கிய முடிவுகளை அறிவிக்கும் நிர்வாகவியலின் கருவியாக செயல்படும் துறையே ஆபரேஷன்ஸ் ரிசர்ச் (ஓ.ஆர்.,) துறையாகும்.
நல்ல தகவல் பரிமாற்றம் மற்றும் தெளிவான முடிவெடுக்கும் தன்மைக்கு இத்துறையின் பங்கு அளப்பரியதாகும்.ஒரு நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு தேவையான தகவல்களை தருவது, எதிர்பாராத விளைவுகளைக் கட்டுப்படுத்துவது, நிறுவனத்தை நிர்வகிக்கத் தேவையான குறுகிய கால மற்றும் நெடுங்கால உத்திகளை வரையறுப்பது போன்ற பிரிவுகளில் ஒ.ஆர்., பெரிதும் உதவுகிறது. ஒ.ஆர்., படித்து முடிப்பவர்களுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளதுடன் கிராக்கியும் கூடிக்கொண்டே வந்துள்ளது.
ஒ.ஆர்., படிப்பின் பயன்பாடு துறைகளைக் கடந்து விரிவுபட்டுக் கொண்டே வருகிறது.
வியாபார சூழலில் இயங்கும் மாறுபட்ட பல்வேறு துறைகளிலும் ஒ.ஆர்., முக்கிய பங்கு வகிப்பது அதன் சிறப்பம்சமாக உள்ளது. சரியான முடிவுகளை தருதல், நிஜ வாழ்க்கையை மையமாகக் கொண்டு உறுதியான மற்றும் எதிர்பார்க்கத் தகுந்த முடிவுகளை தருதல் போன்ற பல அம்சங்களை கொண்டுள்ளதால், ஒ.ஆர்., துறையின் பயன்பாடு அரசுத்துறை, வியாபாரம், பொறியியல், பொருளாதாரம், இயற்கை மற்றும் சமூக அறிவியல் போன்ற குறைந்த ஆதாரங்களைக் கொண்டு செயல்படும் துறைகளில் அதிகம் உள்ளது.
எவ்வாறு செயல்படுகிறது? ஒ.ஆர்., துறையிலிருந்து கிடைக்கும் பயன்கள் பின்வரும் அடிப்படைகளிலேயே உருவாகிறது.
* எந்தப்பிரிவை பற்றி ஆராய விரும்புகிறோமோ, அது கணிதவியல் மாதிரியாக உருவாக்கப்படுகிறது. இவற்றில் முக்கியமான காரணிகளை வடிவப்படுத்தி அதிலிருந்து நிர்வாகம் செயல்பட உதவும் மிக முக்கியமான முடிவுகள் எடுக்க வழிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு பிரச்னையை தனியாக அணுகாமல், அது சார்ந்திருக்கும் மொத்த அமைப்பையும் அறிவியல் பூர்வமாக அணுகுவதன் மூலம் வெற்றிகரமான முடிவுகள் எடுப்பது சாத்தியமாகிறது.
* பிரச்னைகளுக்கான தீர்வுகளின் அமைப்பை ஆராய்ந்து, தொடர்ந்து வெற்றியைப்பெறும் வகையிலான வரையறைகள் ஆராயப்படுகின்றன. இந்தத் தீர்வுகளை கணிதவியலுக்கான துல்லியத்துடனும், அதிகபட்ச
நேர்த்தியுடனும் காண்பது ஒ.ஆர். துறையின் சிறப்பாகும்.
துறைக்குள் நுழைய என்ன தேவை?
ஒ.ஆர்., துறை முடிவுகளுக்கான முக்கியத்துறையாக இருப்பதால் இதில் இணைய விரும்புபவர்களுக்கு சுய ஈடுபாடு, கிரியா சக்தி, உற்சாகம் மற்றும் தொழில்நுட்பத் திறமைகள் தேவைப்படுகின்றன. நிர்வாகவியல் துறையில் ஈடுபாடு கொண்டவர்கள் மட்டுமின்றி, எத்துறையில் இணைய விரும்புவர்களுக்கும் ஒ.ஆர்., படிப்புகள் மிக நல்ல பலனைத்தரும் சக்தி கொண்டுள்ளது. ஒ.ஆர்., படித்தவர்கள் புராஜக்டுகளில் பணிபுரிய வேண்டிய தேவைகள் இருக்கும். கீழ்நிலையில் இருக்கும் புளோர் மேனேஜ்மென்டில் துவங்கி நிர்வாகக்கூட்டம் வரை உள்ள ஒவ்வொரு பிரிவு வேலையிலும் உள்ள நுணுக்கமான அடிப்படைகளை தெரிந்துகொள்ளும் ஆர்வம் இத்துறைக்கு அடிப்படைத் தேவையாக உள்ளது.
ஆராய்ந்து அறியும் திறமை, முடிவுகளை தீர்க்கமாகப் பெறும் வேகம்,
உறவுகளை நன்றாக மேம்படுத்திக் கொள்ளும் திறமைகளை பெற்றிருப்
பவர்கள் ஒ.ஆர்., படிப்பதன் மூலம் முதுநிலை நிர்வாகப் பணிகளில் மேன்மை பெறலாம்.
ஒ.ஆர்., எங்கு பயன்படுகிறது?
ஏற்கனவே கூறியது போல ஒ.ஆர்., துறையின் உபயோகம் துறைகளின் வரையறைகளை கடந்து தொடர்ந்து விரிவுபட்டுக்கொண்டே வந்துள்ளது. ஒ.ஆர்., பயன்படுத்தப்படும் சில துறைகளை இங்கே தருகிறோம்.
* போக்குவரத்து மற்றும் பயணம்: விலை நிர்ணயம், இருக்கைகளின் எண்ணிக்கை, வருமான நிர்ணயம் மற்றும் ஈல்டு மேனேஜ்மென்ட்.
* ரீ டெய்ல் துறை: சந்தையின் தன்மை, வாடிக்கையாளர் பற்றிய
விபரங்கள், ரீடெய்ல் கிளையின் வருமானத்தை அதிகரித்தல்.
* சுகாதாரத்துறை: நிதிச்சேவை அரசு சார்ந்த பணிகள்
பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள்
பாதுகாப்புத்துறை கன்சல்டன்சி நிறுவனங்கள்
டேட்டா பேஸ் மார்க்கெட்டிங்
பிசினஸ் பிராசஸ் ரீ இன்ஜினியரிங்
உற்பத்தித்துறை
நீர்வளம், தகவல் தொழில் நுட்பம், சுரங்கத்துறைகள்
எதிர்காலம் எப்படி?: இன்றைய உலகம் தொடர்ந்து மாறிவரும் தன்மை கொண்டிருப்பது ஒ.ஆர்., துறையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக உள்ளது. சாதாரணமாகத் துவங்கிய ஒ.ஆர்., துறையின் வளர்ச்சி, அதன் உபயோகத்தின் காரணமாக பல துறைகளில் இன்று விரிவுபட்டு வருகிறது. நிறுவனங்களின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றும் ஒ.ஆர்., துறையின் வளர்ச்சி தடைகளின்றி தொடரும் என்பதும், நிர்வாகவியலின் மிக முக்கிய பகுதியாக இத்துறை பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது என்பதும்
இத்துறையில் இணைபவர்களின் எதிர்காலம் பிரகாசமாக மாறும்
என்பதையே உணர்த்துகிறது.
எங்கு படிப்பது?: ஒ.ஆர்., துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்
படிப்புகள் உள்ளன. இவற்றை இந்தியாவில் உள்ள பல்வேறு
பல்கலைக்கழகங்களில் படிக்கலாம். இவை தவிர இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி., மும்பை மற்றும் மேனேஜ்மென்ட் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரிகள் வாயிலாக படிக்கலாம்.